ॐ
கோயில் தகவல்
மூலவர்
ஶ்ரீ ஜெயசுந்தர விநாயகர்
விக்னங்களை நீக்கும் தெய்வம், அனைத்து நற்செயல்களுக்கும் முதல் வணக்கம் செலுத்தப்படும் கணபதி. வெள்ளக்குட்டை கிராமத்தின் வேளாண் பூமியின் முதன்மை தெய்வமாக பல நூற்றாண்டுகளாக வழிபடப்பட்டு வருகிறார்.

கோயில் வரலாறு
சந்தன மாநகரம் என அழைக்கப்படுகின்ற திருப்பத்தூர் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட, வாணியம்பாடிக்கு அடுத்துள்ள வெள்ளக்குட்டை கிராமத்தில் அமைந்துள்ள ஶ்ரீ ஜெயசுந்தர விநாயகர் கோயில் 200 வருடங்களுக்கும் மேலான வரலாற்று சிறப்பு மிகுந்த கோவில்.
தீராவினைகளை தீர்த்து, அக அழகையும், வெற்றியையும் வாரி வழங்கும் ஶ்ரீ ஜெயசுந்தர விநாயகர் பெருமானின் திருக்கோயிலின் ஸ்தல விருக்ஷமாக உள்ளது அரசமரம். வயதை நிர்ணயிக்க இயலாத பிரம்மாண்டமான இந்த அரசமரம், பார்வதி தேவி குளித்து முடித்து உலர்த்தும் முடியைப்போல பரந்து விரிந்த ஒரு தோற்றத்தை இப்போதும் உணரலாம். அந்த தேவியின் மடியில் துயில் கொள்ளும் பாலகனாக ஶ்ரீ ஜெயசுந்தர விநாயகர் அம்மரத்தின் அடியில் வீற்றுள்ளார்.
இக்கோவிலின் அழகையும், மெருகையும் கூட்டும் மற்றொரு சிறப்பு அம்சம், இதனை அடுத்துள்ள அக்னி குளம். இந்த பகுதி மக்கள் அக்னி குளத்தை புனிதமாக நினைத்து இதில் குளிப்பதை தவிர்த்துள்ளனர். மேலும் இந்த குளத்தின் நீரை குடிநீராக பயன்படுத்தி வந்துள்ளனர். முற்காலத்தில், பல மன சஞ்சலங்களில் இருந்து தெளிவு பிறக்க மருந்தாக இத்தீர்த்தம் இருந்து இருக்கிறது. விவசாய கிராமமாகவும், விவசாயத்தை சார்ந்த வியாபார கிராமமாகவும் திகழ்ந்த ஊரின் முழு முதல் கடவுள், செல்ல பிள்ளையார். ஊரில் பிறந்த குழந்தைகளுக்கு அறிவு பசி தீர்க்கும் முதல் அக்ஷரம் தொடங்கி, எல்லா நல்ல காரியங்களுக்கும் முதல் பிரார்த்தனை ஶ்ரீ ஜெயசுந்தர விநாயகருக்கு உரியது.
ஶ்ரீமத் யோகானந்த அம்மையார் அவர்களை ஈர்த்து, அறப்பணிகளில் ஈடுபத்தி, அடுத்துள்ள எல்லா கிராமங்களுக்கும் ஆன்மீக பசி தீர்த்து பின் ஜீவசமாதி ஆன தலமும் இது. சுற்றுவட்ட மாவட்டங்களில், அகத்தில் உள்ள பிரம்மத்தை எளிதில் உணர உண்டான ஜீவ சமாதியும் இதுவே. இதுபோல் இன்னும் கணக்கிலடங்கா பெருமையும், புராதனமும் மிக்க ஶ்ரீ ஜெயசுந்தர விநாயகர் ஆலயத்தை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த திருப்பணி தொடங்கியுள்ளது.
கோயில் நேரம்
காலை6:00 AM - 12:00 PM
மாலை4:00 PM - 8:00 PM
தினசரி பூஜைகள்
- •காலை அபிஷேகம் - 6:30 AM
- •சாயரட்சை - 6:00 PM
- •அர்த்தஜாம பூஜை - 8:00 PM
சிறப்பு பூஜைகள்
விநாயகர் சதுர்த்தி
சங்கட ஹர சதுர்த்தி
மாதாந்திர பூஜைகள்
வருடாந்திர பிரம்மோத்சவம்
புனித முக்கியத்துவம்
இந்த கோயிலின் விநாயகர் மூர்த்தி அதிக வல்லமை மிக்கதாக நம்பப்படுகிறது. பக்தர்கள் தங்களது வாழ்க்கையில் ஏற்படும் தடைகளை நீக்கவும், நல்வாழ்வு பெறவும் இங்கு வழிபடுகின்றனர்.
கட்டடக்கலை
பாரம்பரிய திராவிட பாணியில் கட்டப்பட்ட இந்த கோயில், அழகான சிற்பங்கள் மற்றும் கல் வேலைப்பாடுகளை கொண்டுள்ளது.
கும்பாபிஷேகம் 2025
கோயில் புனரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. கும்பாபிஷேக தேதி விரைவில் அறிவிக்கப்படும்.